1. [QS]நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; [QE][QS]துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். [QE]
2. [QS]சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, [QE][QS]பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். [QE]
3. [QS]அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QE][QS]ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். [QE]
4. [QS]யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், [QE][QS]அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. [QE]
5. [QS]அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; [QE][QS]பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. [QE]
6. [QS]யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், [QE][QS]அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. [QE]
7. [QS]அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, [QE][QS]ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். [QE]
8. [QS]பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; [QE][QS]உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. [QE]
9. [QS]அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். [QE]
10. [QS]யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, [QE][QS]மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். [QE]
11. [QS]யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், [QE][QS]அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். [QE]
12. [QS]யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், [QE][QS]அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. [QE]
13. [QS]யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். [QE]
14. [QS]தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். [QE]
15. [QS]அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். [QE]
16. [QS]எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; [QE][QS]போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். [QE]
17. [QS]காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; [QE][QS]அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. [QE]
18. [QS]தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; [QE]
19. [QS]பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், [QE][QS]யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. [QE]
20. [QS]நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; [QE][QS]அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். [QE]
21. [QS]அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், [QE][QS]நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். [QE]
22. [QS]யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. [QE]