1. {மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல். } [QS]எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, [QE][QS]எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, [QE][QS]அவன் பாக்கியவான். [QE]
2. [QS]எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ, [QE][QS]எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். [QE]
3. [QS]நான் அடக்கிவைத்தவரையில், [QE][QS]எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. [QE]
4. [QS]இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், [QE][QS]என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா) [QE]
5. [QS]நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; [QE][QS]என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; [QE][QS]தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா) [QE]
6. [QS]இதற்காக [* ]உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; [QE][QS]அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது. [QE]
7. [QS]நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; [QE][QS]என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, [QE][QS]இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா) [QE]
8. [QS]நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; [QE][QS]உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். [QE]
9. [QS]வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, [QE][QS]உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும் [QE][QS]கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். [QE]
10. [QS]துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; [QE][QS]யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். [QE]
11. [QS]நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; [QE][QS]செம்மையான இருதயமுள்ளவர்களே, [QE][QS]நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள். [QE]