1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [PS]யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; [PE][QS]நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; [QE][QS]உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். [QE]
2. [QS]உமது செவியை எனக்குச் சாய்த்து, [QE][QS]சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; [QE][QS]நீர் எனக்குப் பலத்த கோபுரமும், [QE][QS]எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும். [QE]
3. [QS]என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; [QE][QS]உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, [QE][QS]என்னை நடத்தியருளும். [QE]
4. [QS]அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; [QE][QS]தேவனே நீரே எனக்கு அடைக்கலம். [QE]
5. [QS]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; [QE][QS]சத்தியபரனாகிய யெகோவாவே, [QE][QS]நீர் என்னை மீட்டுக்கொண்டீர். [QE]
6. [QS]பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, [QE][QS]யெகோவாவையே நம்பியிருக்கிறேன். [QE]
7. [QS]உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; [QE][QS]நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, [QE][QS]என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர். [QE]
8. [QS]எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், [QE][QS]என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். [QE]
9. [QS]எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; [QE][QS]துக்கத்தினால் என் கண்ணும் [QE][QS]என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது. [QE]
10. [QS]என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், [QE][QS]என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; [QE][QS]என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, [QE][QS]என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது. [QE]
11. [QS]என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், [QE][QS]நான் என் அயலாருக்கு நிந்தையும், [QE][QS]எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; [QE][QS]வீதியிலே என்னைக் கண்டவர்கள் [QE][QS]எனக்கு விலகி ஓடிப்போனார்கள். [QE]
12. [QS]செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; [QE][QS]உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன். [QE]
13. [QS]அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; [QE][QS]எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் [QE][QS]திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; [QE][QS]என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள். [QE]
14. [QS]நானோ, யெகோவாவே, [QE][QS]உம்மை நம்பியிருக்கிறேன்; [QE][QS]நீரே என் தேவன் என்று சொன்னேன். [QE]
15. [QS]என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; [QE][QS]என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் [QE][QS]என்னைத் தப்புவியும். [QE]
16. [QS]நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, [QE][QS]உமது கிருபையினாலே என்னை இரட்சியும். [QE]
17. [QS]யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; [QE][QS]நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; [QE][QS]துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். [QE]
18. [QS]நீதிமானுக்கு விரோதமாகப் [QE][QS]பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. [QE]
19. [QS]உமக்குப் பயந்தவர்களுக்கும், [QE][QS]மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், [QE][QS]நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது! [QE]
20. [QS]மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, [QE][QS]நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, [QE][QS]உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். [QE]
21. [QS]யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், [QE][QS]அவருக்கு ஸ்தோத்திரம். [QE]
22. [QS]உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று [QE][QS]நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; [QE][QS]ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, [QE][QS]என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். [QE]
23. [QS]யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, [QE][QS]நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; [QE][QS]உண்மையானவனைக் யெகோவா தற்காத்து, [QE][QS]வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார். [QE]
24. [QS]யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, [QE][QS]நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், [QE][QS]அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார். [QE]