1. {தாவீதின் பாடல். } [QS]தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; [QE][QS]கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். [QE]
2. [QS]யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; [QE][QS]பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். [QE]
3. [QS]யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; [QE][QS]மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; [QE][QS]யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். [QE]
4. [QS]யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; [QE][QS]யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. [QE]
5. [QS]யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; [QE][QS]யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். [QE]
6. [QS]அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், [QE][QS]சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். [QE]
7. [QS]யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். [QE]
8. [QS]யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; [QE][QS]யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார். [QE]
9. [QS]யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, [QE][QS]காடுகளை வெளியாக்கும்; [QE][QS]அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் [QE][QS]யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். [QE]
10. [QS]யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; [QE][QS]யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். [QE]
11. [QS]யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; [QE][QS]யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, [QE][QS]அவர்களை ஆசீர்வதிப்பார். [QE]