1. {தாவீதின் பாடல். } [QS]என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS]நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; [QE][QS]நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். [QE]
2. [QS]நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, [QE][QS]என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். [QE]
3. [QS]அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், [QE][QS]தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும். [QE]
4. [QS]அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; [QE][QS]அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், [QE][QS]அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும். [QE]
5. [QS]அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், [QE][QS]அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். [QE]
6. [QS]யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; [QE][QS]அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். [QE]
7. [QS]யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; [QE][QS]என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; [QE][QS]ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; [QE][QS]என் பாடலினால் அவரைத் துதிப்பேன். [QE]
8. [QS]யெகோவா அவர்களுடைய பெலன்; [QE][QS]அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர். [QE]
9. [QS]தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; [QE][QS]அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும். [QE]