1. {தாவீதின் பாடல். } [QS]யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், [QE][QS]யாருக்குப் பயப்படுவேன்? [QE][QS]யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், [QE][QS]யாருக்கு பயப்படுவேன்? [QE]
2. [QS]என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, [QE][QS]என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள். [QE]
3. [QS]எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; [QE][QS]என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன். [QE]
4. [QS]கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; [QE][QS]நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், [QE][QS]அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், [QE][QS]நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். [QE]
5. [QS]தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, [QE][QS]என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். [QE]
6. [QS]இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; [QE][QS]அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, [QE][QS]யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன். [QE]
7. [QS]யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, [QE][QS]எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.
8. என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, [QE][QS]உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது. [QE]
9. [QS]உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; [QE][QS]நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; [QE][QS]நீரே எனக்கு உதவி செய்பவர்; [QE][QS]என்னுடைய இரட்சிப்பின் தேவனே, [QE][QS]என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும். [QE]
10. [QS]என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், [QE][QS]யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். [QE]
11. [QS]யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், [QE][QS]என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும். [QE]
12. [QS]என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; [QE][QS]பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் [QE][QS]எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். [QE]
13. [QS]நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே [QE][QS]யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்[* விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன் ]. [QE]
14. [QS]யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, [QE][QS]அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், [QE][QS]கர்த்தருக்கே காத்திரு. [QE]