1. {தாவீதின் பாடல்.} யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
2. யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; [QBR] என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். [QBR]
3. உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; [QBR] உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன். [QBR]
4. ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, [QBR] வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. [QBR]
5. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; [QBR] துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன். [QBR]
6. யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, [QBR]
7. எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். [QBR]
8. யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், [QBR] உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன். [QBR]
9. என் ஆத்துமாவைப் பாவிகளோடும், [QBR] என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும். [QBR]
10. அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; [QBR] அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது. [QBR]
11. நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; [QBR] என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். [QBR]
12. என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; [QBR] சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன். [PE]