1. {தாவீதின் பாடல். } [QS]யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
2. யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; [QE][QS]என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். [QE]
3. [QS]உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; [QE][QS]உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன். [QE]
4. [QS]ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, [QE][QS]வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. [QE]
5. [QS]பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; [QE][QS]துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன். [QE]
6. [QS]யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, [QE]
7. [QS]எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். [QE]
8. [QS]யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், [QE][QS]உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன். [QE]
9. [QS]என் ஆத்துமாவைப் பாவிகளோடும், [QE][QS]என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும். [QE]
10. [QS]அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; [QE][QS]அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது. [QE]
11. [QS]நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; [QE][QS]என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். [QE]
12. [QS]என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; [QE][QS]சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன். [QE]