1. {தாவீதின் பாடல். } [QS]யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். [QE]
2. [QS]என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், [QE][QS]நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; [QE][QS]என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். [QE]
3. [QS]உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; [QE][QS]காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. [QE]
4. [QS]யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; [QE][QS]உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். [QE]
5. [QS]உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; [QE][QS]நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், [QE][QS]உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். [QE]
6. [QS]யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், [QE][QS]அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. [QE]
7. [QS]என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; [QE][QS]யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். [QE]
8. [QS]யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; [QE][QS]ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். [QE]
9. [QS]சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, [QE][QS]சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். [QE]
10. [QS]யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, [QE][QS]அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. [QE]
11. [QS]யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; [QE][QS]உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். [QE]
12. [QS]யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ [QE][QS]அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். [QE]
13. [QS]அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; [QE][QS]அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். [QE]
14. [QS]யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; [QE][QS]அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். [QE]
15. [QS]என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; [QE][QS]அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். [QE]
16. [QS]என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; [QE][QS]நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். [QE]
17. [QS]என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; [QE][QS]என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். [QE]
18. [QS]என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, [QE][QS]என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். [QE]
19. [QS]என்னுடைய எதிரிகளைப் பாரும்; [QE][QS]அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். [QE]
20. [QS]என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; [QE][QS]நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். [QE]
21. [QS]உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; [QE][QS]நான் உமக்குக் காத்திருக்கிறேன். [QE]
22. [QS]தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும். [QE]