1. {தாவீதின் பாடல். } [QS]யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; [QE][QS]நான் தாழ்ச்சி அடையமாட்டேன். [QE]
2. [QS]அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, [QE][QS]அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். [QE]
3. [QS]அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். [QE]
4. [QS]நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் [QE][QS]பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; [QE][QS]ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; [QE][QS]உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். [QE]
5. [QS]என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, [QE][QS]என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; [QE][QS]என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது[* லூக்கா 7:46. ]. [QE]
6. [QS]என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; [QE][QS]நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன். [QE]