1. {(இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.) } [QS]என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? [QE][QS]எனக்கு உதவி செய்யாமலும், [QE][QS]நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? [QE]
2. [QS]என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், [QE][QS]பதில் கொடுக்கவில்லை; [QE][QS]இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. [QE]
3. [QS]இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர். [QE]
4. [QS]எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; [QE][QS]நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். [QE]
5. [QS]உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; [QE][QS]உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள். [QE]
6. [QS]நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; [QE][QS]மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், [QE][QS]மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். [QE]
7. [QS]என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, [QE][QS]உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: [QE]
8. [QS]யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, [QE][QS]அவர் இவனை விடுவிக்கட்டும்; [QE][QS]இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, [QE][QS]இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள். [QE]
9. [QS]நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; [QE][QS]என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர். [QE]
10. [QS]கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; [QE][QS]நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர். [QE]
11. [QS]என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; [QE][QS]ஆபத்து நெருங்கியிருக்கிறது, [QE][QS]உதவி செய்ய யாரும் இல்லை. [QE]
12. [QS]அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; [QE][QS]பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன. [QE]
13. [QS]பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், [QE][QS]என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள். [QE]
14. [QS]தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; [QE][QS]என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, [QE][QS]என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, [QE][QS]என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. [QE]
15. [QS]என் பெலன்[* தொண்டை ] ஓட்டைப்போல் காய்ந்தது; [QE][QS]என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; [QE][QS]என்னை மரணத்தூசியிலே போடுகிறீர். [QE]
16. [QS]நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; [QE][QS]பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; [QE][QS]என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். [QE]
17. [QS]என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; [QE][QS]அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். [QE]
18. [QS]என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, [QE][QS]என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள். [QE]
19. [QS]ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; [QE][QS]என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும். [QE]
20. [QS]என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், [QE][QS]எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும். [QE]
21. [QS]என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; [QE][QS]நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும்[† பதில் தரும் ]. [QE]
22. [QS]உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, [QE][QS]சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். [QE]
23. [QS]யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, [QE][QS]அவரைத் துதியுங்கள்; [QE][QS]யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; [QE][QS]இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள். [QE]
24. [QS]உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், [QE][QS]அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, [QE][QS]தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார். [QE]
25. [QS]மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; [QE][QS]அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன். [QE]
26. [QS]ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; [QE][QS]யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; [QE][QS]உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும். [QE]
27. [QS]பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; [QE][QS]தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர்[‡ உமது ] சமுகத்தில் தொழுதுகொள்ளும். [QE]
28. [QS]ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். [QE]
29. [QS]பூமியின் செல்வந்தர் அனைவரும்[§ சாப்பிட்டு ] பணிந்துகொள்வார்கள்; [QE][QS]புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். [QE][QS]ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. [QE]
30. [QS]ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; [QE][QS]தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். [QE]
31. [QS]அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று [QE][QS]பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். [QE]