தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [QS]யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; [QE][QS]உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! [QE]
2. [QS]அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, [QE][QS]அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) [QE]
3. [QS]உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, [QE][QS]அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர். [QE]
4. [QS]அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; [QE][QS]நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். [QE]
5. [QS]உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; [QE][QS]மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர். [QE]
6. [QS]அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; [QE][QS]அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். [QE]
7. [QS]ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; [QE][QS]உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார். [QE]
8. [QS]உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; [QE][QS]உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். [QE]
9. [QS]உமது கோபத்தின் காலத்திலே [QE][QS]அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; [QE][QS]யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; [QE][QS]நெருப்பு அவர்களை அழிக்கும். [QE]
10. [QS]அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் [QE][QS]அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். [QE]
11. [QS]அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; [QE][QS]தீவினை செய்ய முயன்றார்கள்; [QE][QS]ஒன்றும் வாய்க்காமல்போனது. [QE]
12. [QS]உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். [QE]
13. [QS]யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; [QE][QS]அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 150
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 1 யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! 2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) 3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர். 4 அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். 5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர். 6 அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். 7 ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார். 8 உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை அழிக்கும். 10 அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். 11 அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமல்போனது. 12 உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். 13 யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References