தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; [QBR] யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. [QBR]
2. அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, [QBR] சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. [QBR]
3. நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, [QBR] உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா) [QBR]
4. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, [QBR] உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. [QBR]
5. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; [QBR] உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக. [QBR]
6. யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் [QBR] என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; [QBR] தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, [QBR] தமது பரிசுத்த வானத்திலிருந்து [QBR] அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார். [QBR]
7. சிலர் இரதங்களைக்குறித்தும், [QBR] சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; [QBR] நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். [QBR]
8. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; [QBR] நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். [QBR]
9. யெகோவாவே, இரட்சியும்; [QBR] நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
சங்கீதம் 20:3
1 இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. 3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா) 4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. 5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக. 6 யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார். 7 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். 8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 9 யெகோவாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References