1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [QS]ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; [QE][QS]யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. [QE]
2. [QS]அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, [QE][QS]சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. [QE]
3. [QS]நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, [QE][QS]உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா) [QE]
4. [QS]அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, [QE][QS]உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. [QE]
5. [QS]நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; [QE][QS]உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக. [QE]
6. [QS]யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் [QE][QS]என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; [QE][QS]தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, [QE][QS]தமது பரிசுத்த வானத்திலிருந்து [QE][QS]அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார். [QE]
7. [QS]சிலர் இரதங்களைக்குறித்தும், [QE][QS]சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; [QE][QS]நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். [QE]
8. [QS]அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; [QE][QS]நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். [QE]
9. [QS]யெகோவாவே, இரட்சியும்; [QE][QS]நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக. [QE]