தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, [QBR] ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. [QBR]
2. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, [QBR] இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. [QBR]
3. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, [QBR] அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. [QBR]
4. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், [QBR] அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; [QBR] அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். [QBR]
5. அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, [QBR] பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. [QBR]
6. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, [QBR] அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; [QBR] அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. [QBR]
7. யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், [QBR] ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; [QBR] யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், [QBR] பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. [QBR]
8. யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், [QBR] இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; [QBR] யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. [QBR]
9. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், [QBR] என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; [QBR] யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், [QBR] அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. [QBR]
10. அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், [QBR] தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. [QBR]
11. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; [QBR] அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. [QBR]
12. தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? [QBR] மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். [QBR]
13. துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; [QBR] அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; [QBR] அப்பொழுது நான் உத்தமனாகி, [QBR] பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். [QBR]
14. என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, [QBR] என் வாயின் வார்த்தைகளும், [QBR] என் இருதயத்தின் தியானமும், [QBR] உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 150
சங்கீதம் 19:70
1 இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. 2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. 4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். 5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. 6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. 7 யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. 8 யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. 9 யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. 10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. 11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 12 தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். 13 துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References