தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [QS]வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, [QE][QS]ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. [QE]
2. [QS]பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, [QE][QS]இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. [QE]
3. [QS]அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, [QE][QS]அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. [QE]
4. [QS]ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், [QE][QS]அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; [QE][QS]அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். [QE]
5. [QS]அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, [QE][QS]பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. [QE]
6. [QS]அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, [QE][QS]அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; [QE][QS]அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. [QE]
7. [QS]யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், [QE][QS]ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; [QE][QS]யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், [QE][QS]பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. [QE]
8. [QS]யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், [QE][QS]இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; [QE][QS]யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. [QE]
9. [QS]யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், [QE][QS]என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; [QE][QS]யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், [QE][QS]அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. [QE]
10. [QS]அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், [QE][QS]தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. [QE]
11. [QS]அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; [QE][QS]அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. [QE]
12. [QS]தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? [QE][QS]மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். [QE]
13. [QS]துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; [QE][QS]அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; [QE][QS]அப்பொழுது நான் உத்தமனாகி, [QE][QS]பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். [QE]
14. [QS]என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, [QE][QS]என் வாயின் வார்த்தைகளும், [QE][QS]என் இருதயத்தின் தியானமும், [QE][QS]உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 150
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. 2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. 4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். 5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. 6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. 7 யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. 8 யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. 9 யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. 10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. 11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 12 தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். 13 துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 19 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References