1. {இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல். } [QS]என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். [QE]
2. [QS]யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், [QE][QS]என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், [QE][QS]என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், [QE][QS]என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். [QE]
3. [QS]துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; [QE][QS]அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். [QE]
4. [QS]மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. [QE]
5. [QS]பாதாளக்கட்டுகள்[* ] என்னைச் சூழ்ந்துகொண்டன; [QE][QS]மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. [QE]
6. [QS]எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், [QE][QS]என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், [QE][QS]என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், [QE][QS]அவர் காதுகளில் விழுந்தது. [QE]
7. [QS]அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, [QE][QS]மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. [QE]
8. [QS]அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, [QE][QS]அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; [QE][QS]அதனால் தழல் மூண்டது. [QE]
9. [QS]வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; [QE][QS]அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. [QE]
10. [QS]கேருபீன்மேல்[† கேருபீன்கள், யெகோவாவின் சிங்காசனத்தை சுற்றி பாதுக்காக்கும் பரலோக இறக்கைகளுடைய சிருஷ்டிகள் ] ஏறி வேகமாகச் சென்றார்; [QE][QS]காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார். [QE]
11. [QS]இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; [QE][QS]தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார். [QE]
12. [QS]அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், [QE][QS]கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. [QE]
13. [QS]யெகோவா வானங்களிலே குமுறினார், [QE][QS]உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; [QE][QS][‡ சில கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லை ]கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. [QE]
14. [QS]தம்முடைய அம்புகளை எய்து, [QE][QS]அவர்களைச் சிதறடித்தார்; [QE][QS]மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். [QE]
15. [QS]அப்பொழுது யெகோவாவே, [QE][QS]உம்முடைய கண்டிப்பினாலும் [QE][QS]உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, [QE][QS]உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. [QE]
16. [QS]உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, [QE][QS]பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். [QE]
17. [QS]என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் [QE][QS]என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். [QE]
18. [QS]என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; [QE][QS]யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். [QE]
19. [QS]என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், [QE][QS]விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, [QE][QS]என்னைத் தப்புவித்தார். [QE]
20. [QS]யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; [QE][QS]என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். [QE]
21. [QS]ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; [QE][QS]நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை. [QE]
22. [QS]அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; [QE][QS]அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. [QE]
23. [QS]உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, [QE][QS]என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். [QE]
24. [QS]ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், [QE][QS]தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற [QE][QS]என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். [QE]
25. [QS]தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், [QE][QS]உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; [QE]
26. [QS]புனிதனுக்கு நீர் புனிதராகவும், [QE][QS]மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். [QE]
27. [QS]தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; [QE][QS]மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். [QE]
28. [QS]தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; [QE][QS]என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். [QE]
29. [QS]உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; [QE][QS]என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். [QE]
30. [QS]தேவனுடைய வழி உத்தமமானது; [QE][QS]யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; [QE][QS]தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். [QE]
31. [QS]யெகோவாவை தவிர தேவன் யார்? [QE][QS]நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்? [QE]
32. [QS]என்னைப் பலத்தால் இடைகட்டி, [QE][QS]என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. [QE]
33. [QS]அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, [QE][QS]உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார். [QE]
34. [QS]வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, [QE][QS]என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். [QE]
35. [QS]உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; [QE][QS]உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; [QE][QS]உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும். [QE]
36. [QS]என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். [QE]
37. [QS]என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, [QE][QS]அவர்களைப் பிடித்தேன்; [QE][QS]அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை. [QE]
38. [QS]அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். [QE]
39. [QS]போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, [QE][QS]என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர். [QE]
40. [QS]நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, [QE][QS]என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். [QE]
41. [QS]அவர்கள் கூப்பிடுகிறார்கள், [QE][QS]அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; [QE][QS]யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், [QE][QS]அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை. [QE]
42. [QS]நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, [QE][QS]தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். [QE]
43. [QS]மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், [QE][QS]தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; [QE][QS]நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள். [QE]
44. [QS]அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; [QE][QS]அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள். [QE]
45. [QS]அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள். [QE]
46. [QS]யெகோவா உயிருள்ளவர்; [QE][QS]என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; [QE][QS]என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. [QE]
47. [QS]அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். [QE][QS]அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர். [QE]
48. [QS]அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; [QE][QS]எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, [QE][QS]கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். [QE]
49. [QS]இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, [QE][QS]உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன். [QE]
50. [QS]தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, [QE][QS]தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் [QE][QS]அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார். [QE]