1. {தாவீதின் மிக்தாம் என்னும் பாடல். } [QS]தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். [QE]
2. [QS]என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: [QE][QS]தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், [QE][QS]என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்; [QE]
3. [QS]பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், [QE][QS]நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், [QE][QS]அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய். [QE]
4. [QS]அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; [QE][QS]அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், [QE][QS]அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். [QE]
5. [QS]யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; [QE][QS]என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர். [QE]
6. [QS]நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; [QE][QS]ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு. [QE]
7. [QS]எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; [QE][QS]இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும். [QE]
8. [QS]யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; [QE][QS]அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் [QE][QS]நான் அசைக்கப்படுவதில்லை. [QE]
9. [QS]ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; [QE][QS]என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். [QE]
10. [QS]என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; [QE][QS]உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. [QE]
11. [QS]வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; [QE][QS]உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், [QE][QS]உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. [QE]