1. {தாவீதின் பாடல். } [QS]யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? [QE][QS]யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்? [QE]
2. [QS]உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, [QE][QS]மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. [QE]
3. [QS]அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், [QE][QS]தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், [QE][QS]தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். [QE]
4. [QS]ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.
5. தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. [QE]