தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QBR] பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். [QBR]
2. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், [QBR] மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். [QBR]
3. அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, [QBR] தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். [QBR]
4. யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; [QBR] சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். [QBR]
5. பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, [QBR] தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். [QBR]
6. தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், [QBR]
7. அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், [QBR] அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், [QBR] எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், [QBR]
8. அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், [QBR] அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். [QBR]
9. இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். [QBR] அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
சங்கீதம் 149:89
1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். 2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். 3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். 4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், 7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், 8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். 9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References