1. [QS]அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QE][QS]பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். [QE]
2. [QS]இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், [QE][QS]மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். [QE]
3. [QS]அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, [QE][QS]தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். [QE]
4. [QS]யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; [QE][QS]சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். [QE]
5. [QS]பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, [QE][QS]தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். [QE]
6. [QS]தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், [QE]
7. [QS]அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், [QE][QS]அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், [QE][QS]எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், [QE]
8. [QS]அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், [QE][QS]அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். [QE]
9. [QS]இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். [QE][QS]அல்லேலூயா. [QE]