தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]யெகோவாவை துதியுங்கள்; [QE][QS]நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, [QE][QS]துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. [QE]
2. [QS]யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; [QE][QS]துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். [QE]
3. [QS]இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், [QE][QS]அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். [QE]
4. [QS]அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, [QE][QS]அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். [QE]
5. [QS]நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; [QE][QS]அவருடைய அறிவு அளவில்லாதது. [QE]
6. [QS]யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; [QE][QS]துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். [QE]
7. [QS]யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; [QE][QS]நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். [QE]
8. [QS]அவர் வானத்தை மேகங்களால் மூடி, [QE][QS]பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, [QE][QS]மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். [QE]
9. [QS]அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். [QE]
10. [QS]அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; [QE][QS]வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். [QE]
11. [QS]தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் [QE][QS]யெகோவா பிரியமாக இருக்கிறார். [QE]
12. [QS]எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; [QE][QS]சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. [QE]
13. [QS]அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, [QE][QS]உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். [QE]
14. [QS]அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, [QE][QS]செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். [QE]
15. [QS]அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; [QE][QS]அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. [QE]
16. [QS]பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; [QE][QS]சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். [QE]
17. [QS]அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; [QE][QS]அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? [QE]
18. [QS]அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; [QE][QS]தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். [QE]
19. [QS]யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், [QE][QS]இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். [QE]
20. [QS]அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; [QE][QS]அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். [QE][QS]அல்லேலூயா. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 147 / 150
1 யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. 2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். 3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். 5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. 6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். 7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். 8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். 11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார். 12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. 13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. 16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். 20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 147 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References