1. [QS]அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, [QE][QS]யெகோவாவை துதி. [QE]
2. [QS]நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; [QE][QS]நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். [QE]
3. [QS]பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். [QE]
4. [QS]அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; [QE][QS]அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். [QE]
5. [QS]யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, [QE][QS]தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். [QE]
6. [QS]அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; [QE][QS]அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். [QE]
7. [QS]அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; [QE][QS]பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; [QE][QS]கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். [QE]
8. [QS]குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; [QE][QS]விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். [QE][QS]நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். [QE]
9. [QS]அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; [QE][QS]அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; [QE][QS]துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். [QE]
10. [QS]யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; [QE][QS]சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். [QE][QS]அல்லேலூயா. [QE]