1. {தாவீதின் நன்றிப்பாடல். } [QS]ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, [QE][QS]உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன். [QE]
2. [QS]நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, [QE][QS]எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். [QE]
3. [QS]யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; [QE][QS]அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. [QE]
4. [QS]தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, [QE][QS]உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். [QE]
5. [QS]உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், [QE][QS]உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன். [QE]
6. [QS]மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; [QE][QS]உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். [QE]
7. [QS]அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, [QE][QS]உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். [QE]
8. [QS]யெகோவா இரக்கமும் மன உருக்கமும், [QE][QS]நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். [QE]
9. [QS]யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; [QE][QS]அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது. [QE]
10. [QS]யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; [QE][QS]உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள். [QE]
11. [QS]மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், [QE][QS]உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; [QE]
12. [QS]உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, [QE][QS]உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். [QE]
13. [QS]உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், [QE][QS]உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. [QE]
14. [QS]யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, [QE][QS]மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார். [QE]
15. [QS]எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; [QE][QS]ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர். [QE]
16. [QS]நீர் உமது கையைத் திறந்து, [QE][QS]எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். [QE]
17. [QS]யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், [QE][QS]தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். [QE]
18. [QS]தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், [QE][QS]உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், [QE][QS]யெகோவா அருகில் இருக்கிறார். [QE]
19. [QS]அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, [QE][QS]அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, [QE][QS]அவர்களைப் பாதுகாக்கிறார். [QE]
20. [QS]யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, [QE][QS]துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார். [QE]
21. [QS]என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; [QE][QS]மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை [QE][QS]எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும். [QE]