தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் பாடல்.} யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், [QBR] என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; [QBR] உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். [QBR]
2. உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, [QBR] அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். [QBR]
3. எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, [QBR] என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, [QBR] வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான். [QBR]
4. என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; [QBR] என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. [QBR]
5. ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; [QBR] உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். [QBR]
6. என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; [QBR] வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) [QBR]
7. யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், [QBR] என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; [QBR] நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, [QBR] உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். [QBR]
8. அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், [QBR] உம்மை நம்பியிருக்கிறேன், [QBR] நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; [QBR] உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். [QBR]
9. யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; [QBR] உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். [QBR]
10. உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், [QBR] நீரே என் தேவன்; [QBR] உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். [QBR]
11. யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; [QBR] உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை [QBR] பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். [QBR]
12. உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, [QBR] என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; [QBR] நான் உமது அடியேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 143 / 150
சங்கீதம் 143:84
1 தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். 2 உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். 3 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான். 4 என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 5 ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். 6 என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) 7 யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். 8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 9 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். 10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். 11 யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். 12 உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; நான் உமது அடியேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 143 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References