1. {தாவீதின் பாடல். } [QS]யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், [QE][QS]என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; [QE][QS]உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். [QE]
2. [QS]உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, [QE][QS]அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். [QE]
3. [QS]எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, [QE][QS]என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, [QE][QS]வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான். [QE]
4. [QS]என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; [QE][QS]என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. [QE]
5. [QS]ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; [QE][QS]உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். [QE]
6. [QS]என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; [QE][QS]வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) [QE]
7. [QS]யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், [QE][QS]என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; [QE][QS]நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, [QE][QS]உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். [QE]
8. [QS]அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், [QE][QS]உம்மை நம்பியிருக்கிறேன், [QE][QS]நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; [QE][QS]உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். [QE]
9. [QS]யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; [QE][QS]உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். [QE]
10. [QS]உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், [QE][QS]நீரே என் தேவன்; [QE][QS]உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். [QE]
11. [QS]யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; [QE][QS]உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை [QE][QS]பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். [QE]
12. [QS]உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, [QE][QS]என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; [QE][QS]நான் உமது அடியேன். [QE]