1. {குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். } [QS]யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; [QE][QS]யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். [QE]
2. [QS]அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; [QE][QS]அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். [QE]
3. [QS]என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, [QE][QS]நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; [QE][QS]நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். [QE]
4. [QS]வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், [QE][QS]என்னை அறிவார் ஒருவரும் இல்லை; [QE][QS]எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; [QE][QS]என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. [QE]
5. [QS]யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS]நீரே என் அடைக்கலமும், [QE][QS]உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். [QE]
6. [QS]என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், [QE][QS]நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; [QE][QS]என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், [QE][QS]அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். [QE]
7. [QS]உமது பெயரை நான் துதிக்கும்படி, [QE][QS]என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; [QE][QS]எனக்கு நீர் தயவு செய்யும்போது [QE][QS]நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள். [QE]