1. {இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [QS]தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். [QE][QS]அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; [QE][QS]நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. [QE]
2. [QS]தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, [QE][QS]யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார். [QE]
3. [QS]எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; [QE][QS]நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. [QE]
4. [QS]அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? [QE][QS]அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; [QE][QS]அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை. [QE]
5. [QS]அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; [QE][QS]தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே. [QE]
6. [QS]ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், [QE][QS]நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள். [QE]
7. [QS]சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; [QE][QS]யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, [QE][QS]யாக்கோபுக்குச் சந்தோஷமும், [QE][QS]இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். [QE]