1. {இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். } [QS]யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, [QE][QS]அறிந்திருக்கிறீர். [QE]
2. [QS]என்னுடைய உட்காருதலையும் [QE][QS]என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; [QE][QS]என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். [QE]
3. [QS]நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; [QE][QS]என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். [QE]
4. [QS]என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, [QE][QS]இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். [QE]
5. [QS]முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, [QE][QS]உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். [QE]
6. [QS]இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், [QE][QS]எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. [QE]
7. [QS]உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? [QE][QS]உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? [QE]
8. [QS]நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; [QE][QS]நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். [QE]
9. [QS]நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, [QE][QS]கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,
10. அங்கேயும் உமது கை என்னை நடத்தும், [QE][QS]உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். [QE]
11. [QS]இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். [QE]
12. [QS]உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; [QE][QS]இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; [QE][QS]உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. [QE]
13. [QS]நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; [QE][QS]என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
14. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; [QE][QS]உமது செயல்கள் அதிசயமானவைகள்; [QE][QS]அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும். [QE]
15. [QS]நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, [QE][QS]பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, [QE][QS]என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை. [QE]
16. [QS]என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; [QE][QS]என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், [QE][QS]அவைகள் உருவேற்படும் நாட்களும், [QE][QS]உமது புத்தகத்தில் எழுதியிருந்தது. [QE]
17. [QS]தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; [QE][QS]அவைகளின் அளவு எவ்வளவு அதிகம். [QE]
18. [QS]அவைகளை நான் எண்ணப்போனால், [QE][QS]மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன். [QE]
19. [QS]தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; [QE][QS]இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள். [QE]
20. [QS]அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; [QE][QS]உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள். [QE]
21. [QS]யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், [QE][QS]உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை [QE][QS]அருவருக்காமலும் இருப்பேனோ? [QE]
22. [QS]முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; [QE][QS]அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன். [QE]
23. [QS]தேவனே, என்னை ஆராய்ந்து, [QE][QS]என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; [QE][QS]என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும். [QE]
24. [QS]வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, [QE][QS]நித்திய வழியிலே என்னை நடத்தும். [QE]