1. {தாவீதின் பாடல். } [QS]உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; [QE][QS]தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [QE]
2. [QS]உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, [QE][QS]உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; [QE][QS]உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். [QE]
3. [QS]நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; [QE][QS]என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; [QE]
4. [QS]யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் [QE][QS]உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். [QE]
5. [QS]யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், [QE][QS]அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். [QE]
6. [QS]யெகோவா உயர்ந்தவராக இருந்தும், [QE][QS]தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; [QE][QS]மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். [QE]
7. [QS]நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; [QE][QS]என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; [QE][QS]உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். [QE]
8. [QS]யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; [QE][QS]யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; [QE][QS]உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும். [QE]