1. [QS]யெகோவாவை துதியுங்கள்; [QE][QS]அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
2. [QS]தேவாதி தேவனைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
3. [QS]கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
4. [QS]ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
5. [QS]வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
6. [QS]தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
7. [QS]பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது; [QE]
8. [QS]பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
9. [QS]இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது; [QE]
10. [QS]எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
11. [QS]அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
12. [QS]வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
13. [QS]சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
14. [QS]அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
15. [QS]பார்வோனையும் அவன் சேனைகளையும் [QE][QS]செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
16. [QS]தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
17. [QS]பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
18. [QS]பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது.
19. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
20. [QS]பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
21. [QS]அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
22. [QS]அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
23. [QS]நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
24. [QS]நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
25. [QS]உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
26. [QS]பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]