1. அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; [QBR] யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள். [QBR]
2. யெகோவாவுடைய வீட்டிலும், [QBR] நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, [QBR] யெகோவாவை துதியுங்கள். [QBR]
3. யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; [QBR] அது இன்பமானது. [QBR]
4. யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், [QBR] இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். [QBR]
5. யெகோவா பெரியவர் என்றும், [QBR] நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். [QBR]
6. வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், [QBR] யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். [QBR]
7. அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, [QBR] மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, [QBR] காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். [QBR]
8. அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். [QBR]
9. எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் [QBR] அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
10. அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; [QBR]
11. எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், [QBR] கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து, [QBR]
12. அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். [QBR]
13. யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; [QBR] யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். [QBR]
14. யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, [QBR] தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். [QBR]
15. அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், [QBR] மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
16. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, [QBR] அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. [QBR]
17. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, [QBR] அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. [QBR]
18. அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், [QBR] அவைகளைப்போல் இருக்கிறார்கள். [QBR]
19. இஸ்ரவேல் குடும்பத்தாரே, [QBR] யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள். [QBR]
20. லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; [QBR] யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள். [QBR]
21. எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு [QBR] சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். [QBR] அல்லேலூயா. [PE]