1. {சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். } [QS]யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், [QE][QS]எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? [QE]
2. [QS]என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, [QE][QS]எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? [QE][QS]எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? [QE]
3. [QS]என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, [QE][QS]எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் [QE][QS]அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். [QE]
4. [QS]அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, [QE][QS]நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். [QE]
5. [QS]நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; [QE][QS]உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். [QE]
6. [QS]யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். [QE]