1. {ஆரோகண பாடல். } [QS]யெகோவாவுக்குப் பயந்து, [QE][QS]அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். [QE]
2. [QS]உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; [QE][QS]உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். [QE]
3. [QS]உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் [QE][QS]திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; [QE][QS]உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். [QE]
4. [QS]இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் [QE][QS]இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான். [QE]
5. [QS]யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; [QE][QS]நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். [QE]
6. [QS]நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், [QE][QS]இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். [QE]