1. {ஆரோகண பாடல். } [QS]சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, [QE][QS]கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். [QE]
2. [QS]அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், [QE][QS]நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; [QE][QS]அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் [QE][QS]என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். [QE]
3. [QS]யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; [QE][QS]இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம். [QE]
4. [QS]யெகோவாவே, [QE][QS]தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, [QE][QS]எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும். [QE]
5. [QS]கண்ணீரோடு விதைக்கிறவர்கள் [QE][QS]கெம்பீரத்தோடு அறுப்பார்கள். [QE]
6. [QS]அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; [QE][QS]ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு [QE][QS]கெம்பீரத்தோடு திரும்பிவருவான். [QE]