1. {ஆரோகண பாடல். } [QS]என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; [QE][QS]அவர் எனக்குச் செவிகொடுத்தார். [QE]
2. [QS]யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். [QE]
3. [QS]வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? [QE][QS]உனக்கு என்ன செய்யப்படும்? [QE]
4. [QS]பலவானுடைய கூர்மையான அம்புகளும், [QE][QS]சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். [QE]
5. [QS]ஐயோ, நான் மேசேக்கிலே[* மேசேக்கு கருங்கடலுக்கும் காசுப்பியன் கடலுக்கும் மத்தியில் உள்ள பகுதியாகும். கேதார் சீரியவின் தமஸ்குக்கு தென்பகுதியில் உள்ள பகுதியாகும் இங்கு நாடோடிகள் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் மிகவும் வெறித்தனமானவர்களாய் இருந்தார்கள் ] வாழ்ந்தது போதும், [QE][QS]கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்! [QE]
6. [QS]சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! [QE]
7. [QS]நான் சமாதானத்தை நாடுகிறேன்; [QE][QS]அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள். [QE]