1. {ஆரோகண பாடல்.} என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; [QBR] அவர் எனக்குச் செவிகொடுத்தார். [QBR]
2. யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். [QBR]
3. வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? [QBR] உனக்கு என்ன செய்யப்படும்? [QBR]
4. பலவானுடைய கூர்மையான அம்புகளும், [QBR] சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். [QBR]
5. ஐயோ, நான் மேசேக்கிலே [* மேசேக்கு கருங்கடலுக்கும் காசுப்பியன் கடலுக்கும் மத்தியில் உள்ள பகுதியாகும். கேதார் சீரியவின் தமஸ்குக்கு தென்பகுதியில் உள்ள பகுதியாகும் இங்கு நாடோடிகள் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் மிகவும் வெறித்தனமானவர்களாய் இருந்தார்கள் ] வாழ்ந்தது போதும், [QBR] கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்! [QBR]
6. சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! [QBR]
7. நான் சமாதானத்தை நாடுகிறேன்; [QBR] அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள். [PE]