1. {செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; [QBR] உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை. [QBR]
2. அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; [QBR] கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். [QBR]
3. வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், [QBR] பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. [QBR]
4. அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; [QBR] யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். [QBR]
5. ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, [QBR] அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். [QBR]
6. யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, [QBR] புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான [QBR] சுத்தசொற்களாக இருக்கின்றன. [QBR]
7. யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, [QBR] எங்களை [* அவர்களை] என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். [QBR]
8. மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, [QBR] துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள். [PE]