1. {செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [QS]காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; [QE][QS]உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை. [QE]
2. [QS]அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; [QE][QS]கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். [QE]
3. [QS]வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், [QE][QS]பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. [QE]
4. [QS]அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; [QE][QS]யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். [QE]
5. [QS]ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, [QE][QS]அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். [QE]
6. [QS]யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, [QE][QS]புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான [QE][QS]சுத்தசொற்களாக இருக்கின்றன. [QE]
7. [QS]யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, [QE][QS]எங்களை [* அவர்களை ]என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். [QE]
8. [QS]மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, [QE][QS]துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள். [QE]