தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; [QBR] உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை. [QBR]
2. அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; [QBR] கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். [QBR]
3. வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், [QBR] பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. [QBR]
4. அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; [QBR] யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். [QBR]
5. ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, [QBR] அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். [QBR]
6. யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, [QBR] புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான [QBR] சுத்தசொற்களாக இருக்கின்றன. [QBR]
7. யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, [QBR] எங்களை [* அவர்களை] என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். [QBR]
8. மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, [QBR] துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 150
சங்கீதம் 12:56
1 செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை. 2 அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். 3 வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. 4 அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். 5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 6 யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான சுத்தசொற்களாக இருக்கின்றன. 7 யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, எங்களை * அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். 8 மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References