1. {ஆலெப்.} யெகோவாவுடைய வேதத்தின்படி [QBR] நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். [QBR]
2. அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, [QBR] அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். [QBR]
3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை; [QBR] அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். [QBR]
4. உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி [QBR] நீர் கற்றுக்கொடுத்தீர். [QBR]
5. உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, [QBR] என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். [QBR]
6. நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, [QBR] வெட்கப்பட்டுப்போவதில்லை. [QBR]
7. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, [QBR] செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். [QBR]
8. உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; [QBR] முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். பேத். [QBR]
9. {பேத்.} வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? [QBR] உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. [QBR]
10. என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், [QBR] என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும். [QBR]
11. நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, [QBR] உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். [QBR]
12. யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; [QBR] உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். [QBR]
13. உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். [QBR]
14. திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, [QBR] நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். [QBR]
15. உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். [QBR]
16. உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; [QBR] உமது வசனத்தை மறவேன். கிமெல். [QBR]
17. {கிமெல்.} உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, [QBR] உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். [QBR]
18. உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, [QBR] என்னுடைய கண்களைத் திறந்தருளும். [QBR]
19. பூமியிலே நான் அந்நியன்; [QBR] உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். [QBR]
20. உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. [QBR]
21. உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட [QBR] பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர். [QBR]
22. நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; [QBR] நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். [QBR]
23. அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; [QBR] உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். [QBR]
24. உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், [QBR] எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. டாலெத். [QBR]
25. {டாலெத்.} என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; [QBR] உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். [QBR]
26. என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது [QBR] எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QBR]
27. உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; [QBR] அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். [QBR]
28. துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; [QBR] உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். [QBR]
29. பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, [QBR] உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். [QBR]
30. மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, [QBR] உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். [QBR]
31. உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; [QBR] யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். [QBR]
32. நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, [QBR] நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். எ. [QBR]
33. {எ.} யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; [QBR] முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். [QBR]
34. எனக்கு உணர்வைத் தாரும்; [QBR] அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, [QBR] என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். [QBR]
35. உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; [QBR] நான் அதில் பிரியமாக இருக்கிறேன். [QBR]
36. என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், [QBR] உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும். [QBR]
37. மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, [QBR] உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். [QBR]
38. உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். [QBR]
39. நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; [QBR] உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். [QBR]
40. இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; [QBR] உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ. [QBR]
41. {வௌ.} யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, [QBR] உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. [QBR]
42. அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; [QBR] உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். [QBR]
43. சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; [QBR] உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். [QBR]
44. நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். [QBR]
45. நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், [QBR] அகலமான பாதையில் நடப்பேன். [QBR]
46. நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, [QBR] ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். [QBR]
47. நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். [QBR]
48. நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், [QBR] உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். சாயீன். [QBR]
49. {சாயீன்.} நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை [QBR] உமது அடியேனுக்காக நினைத்தருளும். [QBR]
50. அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், [QBR] உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது. [QBR]
51. பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், [QBR] நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
52. யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை [QBR] நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். [QBR]
53. உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது. [QBR]
54. நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே [QBR] உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது. [QBR]
55. யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, [QBR] உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். [QBR]
56. நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், [QBR] இது எனக்குக் கிடைத்தது. ஹெத். [QBR]
57. {ஹெத்.} யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; [QBR] நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். [QBR]
58. முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; [QBR] உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும். [QBR]
59. என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, [QBR] என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். [QBR]
60. உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, [QBR] நான் தாமதிக்காமல் விரைந்தேன். [QBR]
61. துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், [QBR] உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. [QBR]
62. உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, [QBR] உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன். [QBR]
63. உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன். [QBR]
64. யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; [QBR] உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். தேத். [QBR]
65. {தேத்.} யெகோவாவே, உமது வசனத்தின்படி [QBR] உமது அடியேனை நன்றாக நடத்தினீர். [QBR]
66. உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், [QBR] உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன். [QBR]
67. நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; [QBR] இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். [QBR]
68. தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; [QBR] உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QBR]
69. பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; [QBR] நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். [QBR]
70. அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, [QBR] உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன். [QBR]
71. நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; [QBR] அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். [QBR]
72. அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, [QBR] நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். யோட். [QBR]
73. {யோட்.} உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, [QBR] என்னை உருவாக்கினது; [QBR] உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். [QBR]
74. நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். [QBR]
75. யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், [QBR] உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். [QBR]
76. நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, [QBR] உமது கிருபை என்னைத் தேற்றட்டும். [QBR]
77. நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; [QBR] உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. [QBR]
78. பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; [QBR] நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். [QBR]
79. உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும். [QBR]
80. நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, [QBR] என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். கப். [QBR]
81. {கப்.} உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; [QBR] உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். [QBR]
82. எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, [QBR] உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. [QBR]
83. புகையிலுள்ள தோல்பை போலானேன்; [QBR] உமது பிரமாணங்களையோ மறவேன். [QBR]
84. உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? [QBR] என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? [QBR]
85. உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். [QBR]
86. உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; [QBR] அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; [QBR] நீர் எனக்கு உதவி செய்யும். [QBR]
87. அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; [QBR] ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. [QBR]
88. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; [QBR] அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். லாமேட். [QBR]
89. {லாமேட்.} யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் [QBR] வானங்களில் நிலைத்திருக்கிறது. [QBR]
90. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; [QBR] பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. [QBR]
91. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; [QBR] அனைத்தும் உம்மைச் சேவிக்கும். [QBR]
92. உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், [QBR] என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். [QBR]
93. நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; [QBR] அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். [QBR]
94. நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; [QBR] உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். [QBR]
95. துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; [QBR] நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். [QBR]
96. நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; [QBR] உம்முடைய கற்பனையோ மகா பெரிது. மேம். [QBR]
97. {மேம்.} உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! [QBR] நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். [QBR]
98. நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; [QBR] அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. [QBR]
99. உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், [QBR] எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். [QBR]
100. உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், [QBR] முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். [QBR]
101. உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, [QBR] எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். [QBR]
102. நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், [QBR] நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். [QBR]
103. உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; [QBR] என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் [QBR] இனிமையானதாக இருக்கும். [QBR]
104. உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், [QBR] ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன். [QBR]
105. {நூன்.} உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், [QBR] என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. [QBR]
106. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; [QBR] அதை நிறைவேற்றுவேன். [QBR]
107. நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; [QBR] யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். [QBR]
108. யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, [QBR] உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். [QBR]
109. என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; [QBR] ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். [QBR]
110. துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; [QBR] ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். [QBR]
111. உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், [QBR] அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. [QBR]
112. முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக். [QBR]
113. {சாமெக்.} வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். [QBR]
114. என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; [QBR] உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். [QBR]
115. பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; [QBR] என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். [QBR]
116. நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; [QBR] என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும். [QBR]
117. என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, [QBR] எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன். [QBR]
118. உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; [QBR] அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது. [QBR]
119. பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; [QBR] ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். [QBR]
120. உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; [QBR] உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின். [QBR]
121. {ஆயின்.} நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். [QBR]
122. உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; [QBR] பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். [QBR]
123. உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் [QBR] காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. [QBR]
124. உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, [QBR] உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QBR]
125. நான் உமது ஊழியன்; [QBR] உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். [QBR]
126. நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; [QBR] அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். [QBR]
127. ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். [QBR]
128. எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, [QBR] அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே. [QBR]
129. {பே.} உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; [QBR] ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். [QBR]
130. உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, [QBR] பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். [QBR]
131. உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், [QBR] என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். [QBR]
132. உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். [QBR]
133. உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, [QBR] ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும். [QBR]
134. மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; [QBR] அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். [QBR]
135. உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, [QBR] உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QBR]
136. உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், [QBR] என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே. [QBR]
137. {த்சாடே.} யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். [QBR]
138. நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். [QBR]
139. என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், [QBR] என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.
140. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, [QBR] உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். [QBR]
141. நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; [QBR] ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். [QBR]
142. உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம். [QBR]
143. துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; [QBR] ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி. [QBR]
144. உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், [QBR] அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப். [QBR]
145. {கோப்.} முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; [QBR] உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். [QBR]
146. உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; [QBR] அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். [QBR]
147. அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; [QBR] உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். [QBR]
148. உமது வசனத்தைத் தியானிக்கும்படி, [QBR] குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும். [QBR]
149. உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; [QBR] யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும். [QBR]
150. தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; [QBR] அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள். [QBR]
151. யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; [QBR] உமது கற்பனைகளெல்லாம் உண்மை. [QBR]
152. நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, [QBR] அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். ரேஷ். [QBR]
153. {ரேஷ்.} என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; [QBR] உமது வேதத்தை மறக்கமாட்டேன். [QBR]
154. எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், [QBR] உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். [QBR]
155. இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, [QBR] அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள். [QBR]
156. யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; [QBR] உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். [QBR]
157. என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; [QBR] ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன். [QBR]
158. உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, [QBR] எனக்கு அருவருப்பாக இருந்தது. [QBR]
159. இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, [QBR] உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். [QBR]
160. உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், [QBR] உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன். [QBR]
161. {ஷீன்.} அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், [QBR] ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. [QBR]
162. மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, [QBR] நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். [QBR]
163. பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். [QBR]
164. உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். [QBR]
165. உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; [QBR] அவர்களுக்கு தடைகள் இல்லை. [QBR]
166. யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, [QBR] உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். [QBR]
167. என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; [QBR] அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். [QBR]
168. உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; [QBR] என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. தெள. [QBR]
169. {தெள.} யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; [QBR] உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். [QBR]
170. என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; [QBR] உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். [QBR]
171. உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, [QBR] என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும். [QBR]
172. உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், [QBR] என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். [QBR]
173. நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், [QBR] உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும். [QBR]
174. யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; [QBR] உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. [QBR]
175. என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; [QBR] உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும். [QBR]
176. காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; [QBR] உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன். [PE]