1. {ஆலெப். } [QS]யெகோவாவுடைய வேதத்தின்படி [QE][QS]நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். [QE]
2. [QS]அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, [QE][QS]அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். [QE]
3. [QS]அவர்கள் அநியாயம் செய்வதில்லை; [QE][QS]அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். [QE]
4. [QS]உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி [QE][QS]நீர் கற்றுக்கொடுத்தீர். [QE]
5. [QS]உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, [QE][QS]என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். [QE]
6. [QS]நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, [QE][QS]வெட்கப்பட்டுப்போவதில்லை. [QE]
7. [QS]உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, [QE][QS]செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். [QE]
8. [QS]உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; [QE][QS]முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். [QE]
9. {பேத். } [QS]வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? [QE][QS]உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. [QE]
10. [QS]என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், [QE][QS]என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும். [QE]
11. [QS]நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, [QE][QS]உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். [QE]
12. [QS]யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; [QE][QS]உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். [QE]
13. [QS]உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். [QE]
14. [QS]திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, [QE][QS]நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். [QE]
15. [QS]உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். [QE]
16. [QS]உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; [QE][QS]உமது வசனத்தை மறவேன். [QE]
17. {கிமெல். } [QS]உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, [QE][QS]உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். [QE]
18. [QS]உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, [QE][QS]என்னுடைய கண்களைத் திறந்தருளும். [QE]
19. [QS]பூமியிலே நான் அந்நியன்; [QE][QS]உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். [QE]
20. [QS]உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. [QE]
21. [QS]உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட [QE][QS]பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர். [QE]
22. [QS]நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; [QE][QS]நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். [QE]
23. [QS]அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; [QE][QS]உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். [QE]
24. [QS]உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், [QE][QS]எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. [QE]
25. {டாலெத். } [QS]என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; [QE][QS]உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். [QE]
26. [QS]என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது [QE][QS]எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QE]
27. [QS]உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; [QE][QS]அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். [QE]
28. [QS]துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; [QE][QS]உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். [QE]
29. [QS]பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, [QE][QS]உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். [QE]
30. [QS]மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, [QE][QS]உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். [QE]
31. [QS]உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; [QE][QS]யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். [QE]
32. [QS]நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, [QE][QS]நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். [QE]
33. {எ. } [QS]யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; [QE][QS]முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். [QE]
34. [QS]எனக்கு உணர்வைத் தாரும்; [QE][QS]அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, [QE][QS]என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். [QE]
35. [QS]உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; [QE][QS]நான் அதில் பிரியமாக இருக்கிறேன். [QE]
36. [QS]என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், [QE][QS]உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும். [QE]
37. [QS]மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, [QE][QS]உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். [QE]
38. [QS]உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். [QE]
39. [QS]நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; [QE][QS]உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். [QE]
40. [QS]இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; [QE][QS]உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். [QE]
41. {வௌ. } [QS]யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, [QE][QS]உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. [QE]
42. [QS]அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; [QE][QS]உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். [QE]
43. [QS]சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; [QE][QS]உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். [QE]
44. [QS]நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். [QE]
45. [QS]நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், [QE][QS]அகலமான பாதையில் நடப்பேன். [QE]
46. [QS]நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, [QE][QS]ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். [QE]
47. [QS]நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். [QE]
48. [QS]நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், [QE][QS]உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். [QE]
49. {சாயீன். } [QS]நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை [QE][QS]உமது அடியேனுக்காக நினைத்தருளும். [QE]
50. [QS]அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், [QE][QS]உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது. [QE]
51. [QS]பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், [QE][QS]நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
52. யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை [QE][QS]நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். [QE]
53. [QS]உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது. [QE]
54. [QS]நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே [QE][QS]உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது. [QE]
55. [QS]யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, [QE][QS]உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். [QE]
56. [QS]நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், [QE][QS]இது எனக்குக் கிடைத்தது. [QE]
57. {ஹெத். } [QS]யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; [QE][QS]நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். [QE]
58. [QS]முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; [QE][QS]உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும். [QE]
59. [QS]என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, [QE][QS]என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். [QE]
60. [QS]உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, [QE][QS]நான் தாமதிக்காமல் விரைந்தேன். [QE]
61. [QS]துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், [QE][QS]உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. [QE]
62. [QS]உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, [QE][QS]உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன். [QE]
63. [QS]உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன். [QE]
64. [QS]யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; [QE][QS]உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QE]
65. {தேத். } [QS]யெகோவாவே, உமது வசனத்தின்படி [QE][QS]உமது அடியேனை நன்றாக நடத்தினீர். [QE]
66. [QS]உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், [QE][QS]உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன். [QE]
67. [QS]நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; [QE][QS]இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். [QE]
68. [QS]தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; [QE][QS]உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QE]
69. [QS]பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; [QE][QS]நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். [QE]
70. [QS]அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, [QE][QS]உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன். [QE]
71. [QS]நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; [QE][QS]அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். [QE]
72. [QS]அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, [QE][QS]நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். [QE]
73. {யோட். } [QS]உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, [QE][QS]என்னை உருவாக்கினது; [QE][QS]உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். [QE]
74. [QS]நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். [QE]
75. [QS]யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், [QE][QS]உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். [QE]
76. [QS]நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, [QE][QS]உமது கிருபை என்னைத் தேற்றட்டும். [QE]
77. [QS]நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; [QE][QS]உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. [QE]
78. [QS]பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; [QE][QS]நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். [QE]
79. [QS]உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும். [QE]
80. [QS]நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, [QE][QS]என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். [QE]
81. {கப். } [QS]உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; [QE][QS]உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். [QE]
82. [QS]எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, [QE][QS]உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. [QE]
83. [QS]புகையிலுள்ள தோல்பை போலானேன்; [QE][QS]உமது பிரமாணங்களையோ மறவேன். [QE]
84. [QS]உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? [QE][QS]என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? [QE]
85. [QS]உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். [QE]
86. [QS]உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; [QE][QS]அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; [QE][QS]நீர் எனக்கு உதவி செய்யும். [QE]
87. [QS]அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; [QE][QS]ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. [QE]
88. [QS]உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; [QE][QS]அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். [QE]
89. {லாமேட். } [QS]யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் [QE][QS]வானங்களில் நிலைத்திருக்கிறது. [QE]
90. [QS]உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; [QE][QS]பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. [QE]
91. [QS]உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; [QE][QS]அனைத்தும் உம்மைச் சேவிக்கும். [QE]
92. [QS]உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், [QE][QS]என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். [QE]
93. [QS]நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; [QE][QS]அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். [QE]
94. [QS]நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; [QE][QS]உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். [QE]
95. [QS]துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; [QE][QS]நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். [QE]
96. [QS]நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; [QE][QS]உம்முடைய கற்பனையோ மகா பெரிது. [QE]
97. {மேம். } [QS]உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! [QE][QS]நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். [QE]
98. [QS]நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; [QE][QS]அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. [QE]
99. [QS]உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், [QE][QS]எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். [QE]
100. [QS]உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், [QE][QS]முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். [QE]
101. [QS]உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, [QE][QS]எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். [QE]
102. [QS]நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், [QE][QS]நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். [QE]
103. [QS]உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; [QE][QS]என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் [QE][QS]இனிமையானதாக இருக்கும். [QE]
104. [QS]உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், [QE][QS]ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். [QE]
105. {நூன். } [QS]உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், [QE][QS]என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. [QE]
106. [QS]உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; [QE][QS]அதை நிறைவேற்றுவேன். [QE]
107. [QS]நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; [QE][QS]யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். [QE]
108. [QS]யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, [QE][QS]உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். [QE]
109. [QS]என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; [QE][QS]ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். [QE]
110. [QS]துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; [QE][QS]ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். [QE]
111. [QS]உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், [QE][QS]அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. [QE]
112. [QS]முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். [QE]
113. {சாமெக். } [QS]வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். [QE]
114. [QS]என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; [QE][QS]உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். [QE]
115. [QS]பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; [QE][QS]என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். [QE]
116. [QS]நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; [QE][QS]என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும். [QE]
117. [QS]என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, [QE][QS]எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன். [QE]
118. [QS]உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; [QE][QS]அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது. [QE]
119. [QS]பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; [QE][QS]ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். [QE]
120. [QS]உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; [QE][QS]உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். [QE]
121. {ஆயின். } [QS]நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். [QE]
122. [QS]உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; [QE][QS]பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். [QE]
123. [QS]உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் [QE][QS]காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. [QE]
124. [QS]உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, [QE][QS]உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QE]
125. [QS]நான் உமது ஊழியன்; [QE][QS]உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். [QE]
126. [QS]நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; [QE][QS]அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். [QE]
127. [QS]ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். [QE]
128. [QS]எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, [QE][QS]அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். [QE]
129. {பே. } [QS]உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; [QE][QS]ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். [QE]
130. [QS]உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, [QE][QS]பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். [QE]
131. [QS]உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், [QE][QS]என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். [QE]
132. [QS]உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். [QE]
133. [QS]உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, [QE][QS]ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும். [QE]
134. [QS]மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; [QE][QS]அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். [QE]
135. [QS]உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, [QE][QS]உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். [QE]
136. [QS]உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், [QE][QS]என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. [QE]
137. {த்சாடே. } [QS]யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். [QE]
138. [QS]நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். [QE]
139. [QS]என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், [QE][QS]என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.
140. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, [QE][QS]உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். [QE]
141. [QS]நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; [QE][QS]ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். [QE]
142. [QS]உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம். [QE]
143. [QS]துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; [QE][QS]ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி. [QE]
144. [QS]உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், [QE][QS]அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். [QE]
145. {கோப். } [QS]முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; [QE][QS]உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். [QE]
146. [QS]உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; [QE][QS]அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். [QE]
147. [QS]அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; [QE][QS]உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். [QE]
148. [QS]உமது வசனத்தைத் தியானிக்கும்படி, [QE][QS]குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும். [QE]
149. [QS]உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; [QE][QS]யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும். [QE]
150. [QS]தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; [QE][QS]அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள். [QE]
151. [QS]யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; [QE][QS]உமது கற்பனைகளெல்லாம் உண்மை. [QE]
152. [QS]நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, [QE][QS]அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். [QE]
153. {ரேஷ். } [QS]என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; [QE][QS]உமது வேதத்தை மறக்கமாட்டேன். [QE]
154. [QS]எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், [QE][QS]உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். [QE]
155. [QS]இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, [QE][QS]அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள். [QE]
156. [QS]யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; [QE][QS]உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். [QE]
157. [QS]என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; [QE][QS]ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன். [QE]
158. [QS]உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, [QE][QS]எனக்கு அருவருப்பாக இருந்தது. [QE]
159. [QS]இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, [QE][QS]உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். [QE]
160. [QS]உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், [QE][QS]உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். [QE]
161. {ஷீன். } [QS]அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், [QE][QS]ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. [QE]
162. [QS]மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, [QE][QS]நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். [QE]
163. [QS]பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். [QE]
164. [QS]உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். [QE]
165. [QS]உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; [QE][QS]அவர்களுக்கு தடைகள் இல்லை. [QE]
166. [QS]யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, [QE][QS]உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். [QE]
167. [QS]என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; [QE][QS]அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். [QE]
168. [QS]உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; [QE][QS]என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. [QE]
169. {தெள. } [QS]யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; [QE][QS]உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். [QE]
170. [QS]என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; [QE][QS]உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். [QE]
171. [QS]உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, [QE][QS]என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும். [QE]
172. [QS]உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், [QE][QS]என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். [QE]
173. [QS]நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், [QE][QS]உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும். [QE]
174. [QS]யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; [QE][QS]உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. [QE]
175. [QS]என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; [QE][QS]உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும். [QE]
176. [QS]காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; [QE][QS]உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன். [QE]