1. [QS]யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]
2. [QS]அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக. [QE]
3. [QS]அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. [QE]
4. [QS]அவர் கிருபை என்றுமுள்ளதென்று, [QE][QS]யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. [QE]
5. [QS]நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், [QE][QS]யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். [QE]
6. [QS]யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; [QE][QS]மனிதன் எனக்கு என்ன செய்வான்? [QE]
7. [QS]எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; [QE][QS]என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன். [QE]
8. [QS]மனிதனை நம்புவதைவிட, [QE][QS]யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். [QE]
9. [QS]பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். [QE]
10. [QS]எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; [QE][QS]யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். [QE]
11. [QS]என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; [QE][QS]யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். [QE]
12. [QS]தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; [QE][QS]முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; [QE][QS]யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். [QE]
13. [QS]நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; [QE][QS]யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். [QE]
14. [QS]யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; [QE][QS]அவர் எனக்கு இரட்சிப்புமானார். [QE]
15. [QS]நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; [QE][QS]யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். [QE]
16. [QS]யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; [QE][QS]யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். [QE]
17. [QS]நான் சாகாமல், பிழைத்திருந்து, [QE][QS]யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன். [QE]
18. [QS]யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், [QE][QS]என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. [QE]
19. [QS]நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; [QE][QS]நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன். [QE]
20. [QS]யெகோவாவின் வாசல் இதுவே; [QE][QS]நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள். [QE]
21. [QS]நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், [QE][QS]நான் உம்மைத் துதிப்பேன். [QE]
22. [QS]வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, [QE][QS]மூலைக்குத் தலைக்கல்லானது. [QE]
23. [QS]அது யெகோவாவாலே ஆனது, [QE][QS]அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. [QE]
24. [QS]இது யெகோவா உண்டாக்கின நாள்; [QE][QS]இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம். [QE]
25. [QS]யெகோவாவே, இரட்சியும்; [QE][QS]யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும். [QE]
26. [QS]யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; [QE][QS]யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து [QE][QS]உங்களை ஆசீர்வதிக்கிறோம். [QE]
27. [QS]யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; [QE][QS]பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். [QE]
28. [QS]நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; [QE][QS]நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். [QE]
29. [QS]யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; [QE][QS]அவர் கிருபை என்றுமுள்ளது. [QE]