1. யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
2. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக. [QBR]
3. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. [QBR]
4. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, [QBR] யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. [QBR]
5. நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், [QBR] யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். [QBR]
6. யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; [QBR] மனிதன் எனக்கு என்ன செய்வான்? [QBR]
7. எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; [QBR] என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன். [QBR]
8. மனிதனை நம்புவதைவிட, [QBR] யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். [QBR]
9. பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். [QBR]
10. எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; [QBR] யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். [QBR]
11. என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; [QBR] யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். [QBR]
12. தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; [QBR] முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; [QBR] யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். [QBR]
13. நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; [QBR] யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். [QBR]
14. யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; [QBR] அவர் எனக்கு இரட்சிப்புமானார். [QBR]
15. நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; [QBR] யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். [QBR]
16. யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; [QBR] யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். [QBR]
17. நான் சாகாமல், பிழைத்திருந்து, [QBR] யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன். [QBR]
18. யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், [QBR] என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. [QBR]
19. நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; [QBR] நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன். [QBR]
20. யெகோவாவின் வாசல் இதுவே; [QBR] நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள். [QBR]
21. நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், [QBR] நான் உம்மைத் துதிப்பேன். [QBR]
22. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, [QBR] மூலைக்குத் தலைக்கல்லானது. [QBR]
23. அது யெகோவாவாலே ஆனது, [QBR] அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. [QBR]
24. இது யெகோவா உண்டாக்கின நாள்; [QBR] இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம். [QBR]
25. யெகோவாவே, இரட்சியும்; [QBR] யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும். [QBR]
26. யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; [QBR] யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து [QBR] உங்களை ஆசீர்வதிக்கிறோம். [QBR]
27. யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; [QBR] பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். [QBR]
28. நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; [QBR] நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். [QBR]
29. யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [PE]