1. [QS]யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், [QE][QS]அவரில் அன்புகூருகிறேன். [QE]
2. [QS]அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், [QE][QS]நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன். [QE]
3. [QS]மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, [QE][QS]பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். [QE]
4. [QS]அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு: [QE][QS]யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். [QE]
5. [QS]யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர், [QE][QS]நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர். [QE]
6. [QS]யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்; [QE][QS]நான் மெலிந்துபோனேன், [QE][QS]அவர் என்னைப் பாதுகாத்தார். [QE]
7. [QS]என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், [QE][QS]நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு. [QE]
8. [QS]என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், [QE][QS]என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். [QE]
9. [QS]நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன். [QE]
10. [QS]விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; [QE][QS]நான் மிகவும் வருத்தப்பட்டேன். [QE]
11. [QS]எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன். [QE]
12. [QS]யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். [QE]
13. [QS]இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, [QE][QS]யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். [QE]
14. [QS]நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை [QE][QS]அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன். [QE]
15. [QS]யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது. [QE]
16. [QS]யெகோவாவே, நான் உமது அடியேன்; [QE][QS]நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; [QE][QS]என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். [QE]
17. [QS]நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, [QE][QS]யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். [QE]
18. [QS]நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை [QE][QS]அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும், [QE]
19. [QS]யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும், [QE][QS]எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். [QE][QS]அல்லேலூயா. [QE]