தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் பாடல். } [QS]எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, [QE][QS]உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். [QE]
2. [QS]அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே [QE][QS]என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? [QE]
3. [QS]நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; [QE][QS]தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். [QE]
4. [QS]அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், [QE][QS]மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. [QE]
5. [QS]அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; [QE][QS]அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. [QE]
6. [QS]அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; [QE][QS]அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. [QE]
7. [QS]அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; [QE][QS]அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; [QE][QS]தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. [QE]
8. [QS]அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், [QE][QS]அவைகளைப்போலவே இருக்கிறார்கள். [QE]
9. [QS]இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; [QE][QS]அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QE]
10. [QS]ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; [QE][QS]அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QE]
11. [QS]யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, [QE][QS]யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். [QE]
12. [QS]யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், [QE][QS]அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், [QE][QS]அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். [QE]
13. [QS]யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், [QE][QS]சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். [QE]
14. [QS]யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். [QE]
15. [QS]வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE]
16. [QS]வானங்கள் யெகோவாவுடையவைகள்; [QE][QS]பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். [QE]
17. [QS]இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் [QE][QS]யெகோவாவை துதிக்கமாட்டார்கள். [QE]
18. [QS]நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் [QE][QS]யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். [QE][QS]அல்லேலூயா. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 115 / 150
தாவீதின் பாடல். 1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். 2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? 3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். 4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. 5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். 13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். 14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். 15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 16 வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். 17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் யெகோவாவை துதிக்கமாட்டார்கள். 18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 115 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References