1. இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, [QBR]
2. யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், [QBR] இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது. [QBR]
3. கடல் கண்டு விலகி ஓடினது; [QBR] யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. [QBR]
4. மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், [QBR] குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. [QBR]
5. கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; [QBR] யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்; [QBR]
6. மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, [QBR] நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், [QBR] உங்களுக்கு என்ன வந்தது? [QBR]
7. பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், [QBR] யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. [QBR]
8. அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், [QBR] கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். [PE]