1. [QS]இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, [QE]
2. [QS]யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், [QE][QS]இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது. [QE]
3. [QS]கடல் கண்டு விலகி ஓடினது; [QE][QS]யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. [QE]
4. [QS]மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், [QE][QS]குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. [QE]
5. [QS]கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; [QE][QS]யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்; [QE]
6. [QS]மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, [QE][QS]நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், [QE][QS]உங்களுக்கு என்ன வந்தது? [QE]
7. [QS]பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், [QE][QS]யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. [QE]
8. [QS]அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், [QE][QS]கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். [QE]