தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, [QE][QS]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். [QE]
2. [QS]அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், [QE][QS]செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். [QE]
3. [QS]செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; [QE][QS]அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். [QE]
4. [QS]செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; [QE][QS]அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். [QE]
5. [QS]இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். [QE]
6. [QS]அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; [QE][QS]நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். [QE]
7. [QS]துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; [QE][QS]அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். [QE]
8. [QS]அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; [QE][QS]அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். [QE]
9. [QS]வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; [QE][QS]அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். [QE]
10. [QS]துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, [QE][QS]தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 112 / 150
1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். 2 அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 3 செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 5 இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். 6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். 7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். 8 அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். 9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 112 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References