2. யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,
அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. |
6. தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,
தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். |
8. அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,
அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். |
9. அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,
தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. |
10. யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். PE |